பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 52 : தெரிந்துவினையாடல்
குறள் 511:
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும்.
விளக்கம்:
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் செயலுக்கு உரியவனாக ஆளப்படுவான்.
குறள் 512:
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை.
விளக்கம்:
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.
குறள் 513:
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு.
விளக்கம்:
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.
குறள் 514:
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.
விளக்கம்:
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்செயலை மேற்க்கொண்டு செய்யும் போது அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.
குறள் 515:
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
விளக்கம்:
செய்யும் வழிகளை அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
குறள்
516:
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல்.
விளக்கம்:
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
குறள் 517:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல்.
விளக்கம்:
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
குறள் 518:
வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல்.
விளக்கம்:
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
குறள் 519:
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்கும் திரு.
விளக்கம்:
மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
குறள்
520:
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு
விளக்கம்:
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
No comments:
Post a Comment