Saturday, May 19, 2018

திருக்குறள்

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.
இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் அழகாக எடுத்துரைக்கிறது.
வாழ்கையின் அனைத்து பகுதிகளையும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த வாழ்வியல் நூலாகும்.
சாதி, மதம், மொழி, நாடு என்று வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் பொருந்துவதாக உள்ளதால் உலக பொது மறை என்று அழைக்கப்படுகிறது. தெய்வநூல், பொய்யாமொழி,தமிழ் மறை,முப்பால் என்று வேறு பெயர்களும் உண்டு.
இந்நூலை பாராட்டித் தோன்றியது திருவள்ளுவமாலை. இந்நூல் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளில் 133 அதிகாரமும், அதிகாரத்துக்கு 10 குறளும் மொத்தம் 1330 குறளும் அடங்கியுள்ளது. ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளையும் ஏழு சீரும் கொண்ட வெண்பாவாகும்.
இந்நூலில் பெரும் பிரிவு பால் எனவும்,சிறு பிரிவு இயல் எனவும், அதனினும் சிறியது அதிகாரம் என்று வகுக்க பெற்றுள்ளது.
அறத்துப்பால்-38 அதிகாரங்கள்
பொருட்பால்-70 அதிகாரங்கள்
காமத்துப்பால்-25 அதிகாரங்கள் 
திருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளதால், காலத்துக்கும் ஆசிரியரின் அறிவுக்கும் தகுந்தார் போல் இயலை மாற்றி அமைத்துள்ளனர்.
 
திருவள்ளுவர் மூன்று காலம் உணர்ந்த ஞானி. அவரால் எழுதப்பட்ட நூல் திருக்குறள். ஆதலால் மூன்று காலம் உணர்ந்த வல்லுநர்கலால் மட்டுமே திருக்குறளை உணர்ந்த கொள்ள முடியும்.சாதாரன மனிதனுக்கு ஒரு பொருளும் தவத்தில் உயர்ந்த உள்ளத்துக்கு வேறு ஒரு பொருளும் தெரியும்.சிவலிங்கத்தை குழந்தைகளுக்கு(சாதாரன மனிதர்) சொல்லி தந்த விதத்திலும் , மாற்றுப்பால் மீது பற்று கொண்டவர்களால் வேறு ஒரு பொருள் அதாவது ஆண் பெண் உறுப்பு என்றும் , கடவுளை கண்ட உயர்ந்த ஞானிக்கு உயிர் வடிவமாகிய கோளத்தின்(முட்டை) வடிவமாக தோன்றும் என்று பெரியோர்களின் கூற்று.
காமம் என்றால் ஆண் மீது பெண்னுக்கும், பெண் மீது ஆணுக்கும் உள்ள காதல் தான் என்று தோன்றும். ஆனால் பெரியோர்கள் அதாவது தவத்தில் உயர்ந்த நிலை நோக்கிப்பயணம் செய்கிறவர்கள் மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள காதல் என்றும் சொல்லப்படுகிறது.
மிருகமாக பிறந்து மனிதனாக மாறுவோம், பின்பு கடவுளாக மாறுவோம். இதில் மிருகமாக அப்படியே இருந்துவிடுவோம். மனித தன்மையிலிருந்து மிருகத்தன்மையும் பின்பு தெய்வத்தன்மையும் வரலாம்.எப்படி வேண்டுமானலும் நடக்கலாம்.மிருகத்தன்மையிலிருந்து மனித தன்மைக்கும், மனித தன்மையிலிருந்து தெய்வத்தன்மைக்கும் மாறுவதற்க்கு வழி இத்திருக்குறளில் இருப்பதாக பெரியோர்களின் கூற்று.
அதிகாரம் ஒவ்வொன்றும் அனுபவத்தின் சொத்து. கடவுளை நோக்கி பயணம் செய்தால் குறளில் உள்ள பொருளின் சூட்சமம் புரியும்.தமிழின் அறிவு, இயற்கை அறிவு மற்றும் தவத்தினால் வரும் அநுபவம் சேரும் பொழுது திருக்குறள் தன் சூச்சமத்தை வெளிப்படுத்திவிடும்.

காமத்துப்பால்


காமத்துப்பால்

களவியல்

109.              தகையணங்குறுத்தல்

110.              குறிப்பறிதல்

111.              புணர்ச்சிமகிழ்தல்

112.              நலம்புனைந்துரைத்தல்

113.              காதற்சிறப்புரைத்தல்

114.              நாணுத்துறவுரைத்தல்

115.              அலரறிவுறுத்தல்

கற்பியல்

116.              பிரிவாற்றாமை

117.              படர்மெலிந்திரங்கல்

118.              கண்விதுப்பழிதல்

119.              பசப்புறுபருவரல்

120.              தனிப்படர்மிகுதி

121.              நினைந்தவர்புலம்பல்

122.              கனவுநிலையுரைத்தல்

123.              பொழுதுகண்டிரங்கல்

124.              உறுப்புநலனழிதல்

125.              நெஞ்சொடுகிளத்தல்

126.              நிறையழிதல்

127.              அவர்வயின்விதும்பல்

128.              குறிப்பறிவுறுத்தல்

129.              புணர்ச்சிவிதும்பல்

130.              நெஞ்சொடுபுலத்தல்

131.              புலவி

132.              புலவி நுணுக்கம்

133.              ஊடலுவகை

அரசியல்

பொருட்பால்  
இயல்கள்  : அரசியல்  

இறைமாட்சி

கல்வி

கல்லாமை

கேள்வி

அறிவுடைமை

குற்றங்கடிதல்

பெரியாரைத் துணைக்கோடல்

சிற்றினஞ்சேராமை

தெரிந்துசெயல்வகை

வலியறிதல்

காலமறிதல்

இடனறிதல்

தெரிந்துதெளிதல்

தெரிந்துவினையாடல்

சுற்றந்தழால்

பொச்சாவாமை

செங்கோன்மை

கொடுங்கோன்மை

வெருவந்தசெய்யாமை

கண்ணோட்டம்

ஒற்றாடல்

ஊக்கமுடைமை

மடியின்மை

ஆள்வினையுடைமை

இடுக்கணழியாமை
 

Friday, May 18, 2018

133-ஊடலுவகை

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133 : ஊடலுவகை

குறள் 1321:
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.

விளக்கம்:
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

குறள் 1322:
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

விளக்கம்:
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.

குறள் 1323:
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

விளக்கம்:
நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ?.

குறள் 1324:
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

விளக்கம்:
காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.

குறள் 1325:
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

விளக்கம்:
தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

குறள்
1326:
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

விளக்கம்:
உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.

குறள் 1327:
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

விளக்கம்:
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

குறள் 1328:
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

விளக்கம்:
நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?.

குறள் 1329:
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

விளக்கம்:
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

குறள் 1330:
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

விளக்கம்:
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

132-புலவி நுணுக்கம்

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132 : புலவி நுணுக்கம்

குறள் 1311:
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

விளக்கம்:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

குறள் 1312:
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

விளக்கம்:
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

குறள் 1313:
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

விளக்கம்:
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

குறள் 1314:
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

விளக்கம்:
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.

குறள் 1315:
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

விளக்கம்:
இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.

குறள் 1316:
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

விளக்கம்:
நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

குறள் 1317:
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று

விளக்கம்:
யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?.

குறள் 1318:
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

விளக்கம்:
அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.

குறள் 1319:
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

விளக்கம்:
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.

குறள் 1320:
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

விளக்கம்:
அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.

திருக்குறள்

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் ...