பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 42: கேள்வி
குறள் 411:
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை.
விளக்கம்:
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
குறள் 412:
செவுக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்.
விளக்கம்:
செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது அதற்க்கு
துணையாக உடலை ஒப்புமாறு வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
குறள் 413:
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
விளக்கம்:
கற்றவரின் செவியுணவாகிய
கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு
ஒப்பாவார்.
குறள் 414:
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை.
விளக்கம்:
நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.
குறள் 415:
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
விளக்கம்:
கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.
குறள் 416:
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்ஆன்ற பெருமை தரும்.
விளக்கம்:
எவ்வளவு சிறிதே ஆயினும்
நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும்,
கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.
குறள் 417:
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர்.
விளக்கம்:
நுட்பமாக உணர்ந்து
நிறைந்த கேள்வியறிவை உடையவர், ஒரு கால் பொருள்களைத்
தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
குறள் 418:
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி.
விளக்கம்:
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக் கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
குறள் 419:
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கியவாயின ராதல் அரிது.
விளக்கம்:
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
குறள் 420:
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினும் என்.
விளக்கம்:
செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.
No comments:
Post a Comment