பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41:கல்லாமை
குறள் 401:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல்.
விளக்கம்:
அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.
குறள் 402:
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று.
விளக்கம்:
எண் கற்றவரின் அவையில் கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.
குறள் 403:
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்.
விளக்கம்:
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
குறள் 404:
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்கொள்ளார் அறிவுடை யார்.
விளக்கம்:
கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.
குறள் 405:
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாடச் சோர்வு படும்.
விளக்கம்:
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு கற்றவரிடம் கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.
குறள் 406:
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.
விளக்கம்:
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
குறள் 407:
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று.
விளக்கம்:
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.
குறள் 408:
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு.
விளக்கம்:
கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.
குறள் 409:
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.
விளக்கம்:
கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த
குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
குறள் 410:
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர்.
விளக்கம்:
அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
No comments:
Post a Comment