பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 95 : மருந்து
குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
வளிமுதலா எண்ணிய மூன்று.
விளக்கம்:
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம்
என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
அற்றது போற்றி உணின்.
விளக்கம்:
முன் உண்ட உணவு செரித்த தன்மை
ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு
மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
குறள் 943:
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
விளக்கம்:
முன் உண்ட உணவு செரித்துவிட்டால்,
பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும்,
அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும்
வழியாகும்.
குறள் 944:
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
துய்க்க துவரப் பசித்து.
விளக்கம்:
முன் உண்ட உணவு செரித்த தன்மையை
அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண
வேண்டும்.
குறள் 945:
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
விளக்கம்:
மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல்
மறுத்து அளவோடு உண்டால், உயிர்
உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
குறள் 946:
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
கழிபேர் இரையான்கண் நோய்.
விளக்கம்:
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து
உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும்
உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.
குறள் 947:
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
நோயள வின்றிப் படும்.
விளக்கம்:
பசித்தீயின் அளவின் படி அல்லாமல்,
அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால்
நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
விளக்கம்:
நோய் இன்னதென்று ஆராய்ந்து,
நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத்
தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு
பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
கற்றான் கருதிச் செயல்.
விளக்கம்:
மருத்துவ நூலைக் கற்றவன்,
நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும்,
நோயின் அளவையும், காலத்தையும்
ஆராய்ந்து செய்ய வேண்டும்.
குறள் 950:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.
அப்பால் நாற்கூற்றே மருந்து.
விளக்கம்:
நோயுற்றவன், நோய்
தீர்க்கும் மருத்துவன், மருந்து,
மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த
நான்குவகைப் பாகுபாடு உடையது.
No comments:
Post a Comment