காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118 : கண்விதுப்பழிதல்
குறள் 1171:
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தாம்காட்ட யாம்கண் டது.
விளக்கம்:
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.
குறள் 1172:
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்பைதல் உழப்பது எவன்.
விளக்கம்:
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.
குறள் 1173:
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்இதுநகத் தக்க துடைத்து.
விளக்கம்:
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.
குறள் 1174:
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றாஉய்வில்நோய் என்கண் நிறுத்து.
விளக்கம்:
என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.
குறள் 1175:
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்காமநோய் செய்தஎன் கண்.
விளக்கம்:
அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை
உண்டாக்கிய என் கண்கள், இன்று
உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.குறள் 1176:
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
விளக்கம்:
எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய
கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும்
நல்லதே!.
குறள் 1177:
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்துவேண்டி அவர்க்கண்ட கண்.
விளக்கம்:
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.
குறள் 1178:
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்காணாது அமைவில கண்.
விளக்கம்:
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.
குறள் 1179:
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடைஆரஞர் உற்றன கண்.
விளக்கம்:
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.
குறள் 1180:
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்அறைபறை கண்ணார் அகத்து.
விளக்கம்:
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று
No comments:
Post a Comment