காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114 : நாணுத்துறவுரைத்தல்
குறள் 1131:
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்மடலல்லது இல்லை வலி.
விளக்கம்:
காமத்தால் துன்புற்று காதலின் அன்பு பெறாமல் வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
குறள் 1132:
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்நாணினை நீக்கி நிறுத்து.
விளக்கம்:
காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப் பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
குறள் 1133:
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல்.
விளக்கம்:
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், காதலியை பிரிந்து வருந்துகின்ற இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.
குறள் 1134:
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடுநல்லாண்மை என்னும் புணை.
விளக்கம்:
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக்
காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
குறள் 1135:
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடுமாலை உழக்கும் துயர்.
விளக்கம்:
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.
குறள் 1136:
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றபடல்ஒல்லா பேதைக்கென் கண்.
விளக்கம்:
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும்
உறுதியாக நினைக்கின்றேன், காதலியின்
பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
குறள் 1137:
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்பெண்ணின் பெருந்தக்க தில்.
விளக்கம்:
கடல் போன்ற காமநோயால் வருந்தியும்,
மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண்
பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.
குறள் 1138:
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்மறையிறந்து மன்று படும்.
விளக்கம்:
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை
இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம்
மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!.
குறள் 1139:
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்மறுகின் மறுகும் மருண்டு.
விளக்கம்:
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
குறள் 1140:
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்யாம்பட்ட தாம்படா ஆறு.
விளக்கம்:
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
No comments:
Post a Comment