பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101 : நன்றியில்செல்வம்
குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்தது இல்.
விளக்கம்:
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.
குறள்
1002:
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்மருளானாம் மாணாப் பிறப்பு.
விளக்கம்:
பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.
குறள் 1003:
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை.
விளக்கம்:
சேர்த்து வைப்பதையே விரும்பிப்
பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே
ஆகும்.
குறள் 1004:
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன்.
விளக்கம்:
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.
குறள் 1005:
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடியுண் டாயினும் இல்.
விளக்கம்:
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.
குறள்
1006:
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்றுஈதல் இயல்பிலா தான்.
விளக்கம்:
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று
கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள
பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.
குறள் 1007:
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று.
விளக்கம்:
பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.
குறள் 1008:
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று.
விளக்கம்:
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.
குறள் 1009:
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டியஒண்பொருள் கொள்வார் பிறர்.
விளக்கம்:
பிறரிடம் செலுத்தும் அன்பையும்
விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும்
பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.
குறள்
1010:
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனையது உடைத்து.
விளக்கம்:
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய
வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.
No comments:
Post a Comment