பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86 : இகல்
குறள் 851:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
பண்பின்மை பாரிக்கும் நோய்.
விளக்கம்:
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு
பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் மாறுபாடு என்று
சொல்வர் அறிஞர்.
குறள் 852:
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
இன்னாசெய் யாமை தலை.
விளக்கம்:
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக்
கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம்
செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.
குறள் 853:
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
தாவில் விளக்கம் தரும்.
விளக்கம்:
ஒருவன் இகல் என்று சொல்லப்படும்
துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.
குறள் 854:
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
துன்பத்துள் துன்பங் கெடின்.
விளக்கம்:
இகல் என்று சொல்லப்படும்
துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது
அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.
குறள் 855:
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.
மிக்லூக்கும் தன்மை யவர்.
விளக்கம்:
இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே
சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.
குறள் 856:
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
தவலும் கெடலும் நணித்து.
விளக்கம்:
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது
என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.
குறள் 857:
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.
இன்னா அறிவி னவர்.
விளக்கம்:
இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர்
வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.
குறள் 858:
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
விளக்கம்:
இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல்
ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை
எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.
குறள் 859:
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.
மிகல்காணும் கேடு தரற்கு.
விளக்கம்:
ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது
இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது
அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.
குறள் 860:
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
நன்னயம் என்னும் செருக்கு.
விளக்கம்:
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை
எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய
பெருமித நிலை உண்டாகும்.
No comments:
Post a Comment