பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 79 : நட்பு
குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.
விளக்கம்:
நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.
குறள் 782:
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு.
விளக்கம்:
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.
குறள் 783:
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.
விளக்கம்:
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
குறள் 784:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்செனறு இடித்தற் பொருட்டு.
விளக்கம்:
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர்
சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர்
நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
குறள் 785:
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்.
விளக்கம்:
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு.
விளக்கம்:
முகம் மட்டும் மலரும் படியா நட்பு
செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு
கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
குறள் 787:
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு.
விளக்கம்:
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
குறள் 788:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.
விளக்கம்:
உடைநெகிழ்ந்தவனுடைய கை,
உடனே உதவிக்காப்பது போல் நண்பனுக்குத் துன்பம் வந்தால்
அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
குறள் 789:
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
விளக்கம்:
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
குறள் 790:
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.
விளக்கம்:
இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.
No comments:
Post a Comment