பொருட்பால்
கூழியல்
கூழியல்
அதிகாரம் 76 : பொருள்செயல்வகை
குறள் 751:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்லது இல்லை பொருள்.
விளக்கம்:
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
குறள் 752:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு.
விளக்கம்:
பொருள் இல்லாதவரை வேறு நன்மை உடையவராக இருந்தாலும் எல்லாரும் இகழ்வார், செல்வரை வேறு நன்மை இல்லாவிட்டாலும் எல்லாரும் சிறப்பு செய்வர்.
குறள் 753:
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று.
விளக்கம்:
பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.
குறள் 754:
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
விளக்கம்:
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.
குறள் 755:
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல்.
விளக்கம்:
அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்
குறள் 756:
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
விளக்கம்:
இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.
குறள் 757:
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்செல்வச் செவிலியால் உண்டு.
விளக்கம்:
அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக்
கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும்
செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.
குறள் 758:
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுஉண்டாகச் செய்வான் வினை.
விளக்கம்:
தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம்
இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின்
மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.
குறள் 759:
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்எஃகதனிற் கூரிய தில்.
விளக்கம்:
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.
குறள் 760:
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு.
விளக்கம்:
சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.
No comments:
Post a Comment