பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 69 : தூது
குறள் 681:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
விளக்கம்:
அன்புடையவனாதல்,
தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும்
சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய
இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
குறள் 682:
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
இன்றி யமையாத மூன்று.
விளக்கம்:
அன்பு, அறிவு,
ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது
உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.
குறள் 683:
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
வென்றி வினையுரைப்பான் பண்பு.
விளக்கம்:
அரசனிடம் சென்று தன் அரசனுடைய
வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல்
வல்லவனாக விளங்குதல் ஆகும்.
குறள் 684:
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
செறிவுடையான் செல்க வினைக்கு.
விளக்கம்:
இயற்கை அறிவு,
விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி
உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச்
செல்லலாம்.
குறள் 685:
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
நன்றி பயப்பதாந் தூது.
விளக்கம்:
பலவற்றைத் தொகுத்து சொல்லியும்,
அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு
சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.
குறள் 686:
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.
தக்கது அறிவதாம் தூது.
விளக்கம்:
கற்பன கற்று, பிறருடைய
பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி,
காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.
குறள் 687:
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
எண்ணி உரைப்பான் தலை.
விளக்கம்:
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து
, அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும்
ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.
குறள் 688:
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
விளக்கம்:
தூய ஒழுக்கம் உடையவனாதல்,
துணை உடையவனாதல், துணிவு
உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
குறள் 689:
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்
வாய்சேரா வன்க ணவன்
விளக்கம்:
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும்
சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும்
தகுதியுடையவன்.
குறள் 690:
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
உறுதி பயப்பதாம் தூது.
விளக்கம்:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும்
அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன்
அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
No comments:
Post a Comment