அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 14 : ஒழுக்கமுடைமை
குறள்
131:
ஒழுக்கம்
விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.
விளக்கம்:
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
குறள் 132:
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே
துணை.
விளக்கம்:
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
குறள்
133:
ஒழுக்கம் உடைமை
குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய்
விடும்.
விளக்கம்:
ஒழுக்கம்
உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம்
தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.குறள் 134:
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங்
குன்றக் கெடும்.
விளக்கம்:
கற்ற
மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால்
மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.
குறள்
135:
அழுக்கா
றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண்
உயர்வு.
விளக்கம்:
பொறாமை
உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய
வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.
குறள்
136:
ஒழுக்கத்தின்
ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்
கறிந்து.
விளக்கம்:
ஒழுக்கம்
தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர்
ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.
குறள்
137:
ஒழுக்கத்தின்
எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப்
பழி.
விளக்கம்:
ஒழுக்கத்தால்
எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால்
அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
குறள்
138:
நன்றிக்கு
வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை
தரும்.
விளக்கம்:
நல்லொழுக்கம்
இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்;
தீயொழுக்கம்
எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
குறள்
139:
ஒழுக்க
முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும்
வாயாற் சொலல்.
விளக்கம்:
தீய
சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம்
உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
குறள்
140:
உலகத்தோடு ஒட்ட
ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா
தார்.
விளக்கம்:
உலகத்து
உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர்,
பல
நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
No comments:
Post a Comment